fbpx

வாவ்: அஜ்மீர் தர்காவிற்கு புனித விரிப்பை பரிசளித்த பிரதமர் மோடி.! சமூக வலைதளத்தில் பெருமிதம்.!

ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராம்லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்த இருக்கும் பிரதமர் மோடி நாடு முழுவதும் இருக்கும் புனித தளங்களுக்கு சிறப்பு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நாசிக் நகரில் உள்ள புனிதமிக்க கோதாவரி நதிக்கரைக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் அங்குள்ள கோயில் வளாகத்தை சுத்தம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித ஸ்தலமான அஜ்மீர் தர்காவிற்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் பழமை வாய்ந்த அஜ்மீர் தர்கா அமைந்திருக்கிறது. இந்த தர்காவின் அடக்கஸ்தலத்திற்கு போர்த்தப்படும் புனித விரிப்பை பரிசாக வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் ” தர்காவை சேர்ந்த இஸ்லாமியர்களுடன் உரையாடினேன். அவர்களுக்கு புனித விரிப்பை பரிசளித்திருக்கிறேன். காஜா மொய்னுத்தின் சிஸ்தி உரூஸ் பண்டிகையின் போது நான் கொடுத்த புனித விரிப்பை போர்த்துவதாக தெரிவித்துள்ளார்கள்” என பதிவு செய்திருக்கிறார்.

Next Post

வீட்டில் துளசி செடி வைத்திருப்போர் கவனத்திற்கு..! ஞாயிற்றுக்கிழமைகளில் நீர் ஊற்றக்கூடாதா..? மேலும் விவரம்…

Sat Jan 13 , 2024
துளசி செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. துளசி செடி லட்சுமி தேவியின் இருப்பிடம் என்று நம்பப்படுகிறது. துளசி செடியை தவறாமல் வழிபடும் வீடுகளில், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது. உங்கள் வீட்டில் துளசி செடி வைத்திருந்தால், சில விதிகளைப் பின்பற்றுவது அவசியம். துளசி தொடர்பான இந்த விதிகளை புறக்கணிப்பது குடும்பத்திற்கு வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும். அதன்படி துளசி செடியை வீட்டில் வைத்திருக்கும் நபர்கள் […]

You May Like