வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டா விழா இன்று நடைபெற்றது. கோயிலின் மூலவரான குழந்தை ராமரின் 4.25அடி உயர சிலை நிறுவப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பிரதிஷ்டை பூஜையில் உடனிருந்தனர். அதனைத்தொடர்ந்து குழந்தை ராமரின் திருவுருவ சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காண்பித்தார். இந்த பூஜையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் குழந்தை ராமரின் சிலை திறக்கப்பட்டதையொட்டி, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. நகைகளால் அலங்கரிக்கப்ட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும் குழந்தை ராமரின் திருவுருவ சிலை முன் பிரதமர் நரேந்திர மோடி மனமுருகி பிரார்த்தனை செய்தார். ராமர் கோயில் திறப்பையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.