fbpx

இன்று பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துக்கொள்ள பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்ய உள்ளார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும்.

இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரைத் தலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக, டிசம்பர் 13, 2024 அன்று பிரயாக்ராஜுக்கு பயணம் செய்தபோது, பிரதமர் ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இது பொதுமக்களுக்கான இணைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தியது

English Summary

Prime Minister Modi to attend Maha Kumbh Mela in Prayagraj

Vignesh

Next Post

திராட்சையின் நிறத்தைப் பார்த்தே அது புளிப்பா?. இனிப்பா? என்பதை கண்டுபிடிக்கலாம்!. எப்படி தெரியுமா?.

Wed Feb 5 , 2025
You can tell if a grape is sour or sweet by looking at its color! How do you know?

You May Like