fbpx

பிரதமர் வீடு கட்டும் திட்டம்… விரைவில் 3 கோடி வீடு…! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு…!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்ட அரசு நிதியுதவி.

தகுதி வாய்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்குவதற்காக மத்திய அரசு 2015-16-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியான ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் வீட்டு கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்பு போன்ற பிற அடிப்படை வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், எழும் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய, கூடுதலாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்க இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

English Summary

Government funding for construction of 3 crore rural and urban houses under Prime Minister’s Housing Scheme

Vignesh

Next Post

பேரழிவு எச்சரிக்கை!. 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!. 100 அடி உயரத்திற்கு மிக மோசமான சுனாமி ஏற்படும்!

Tue Jun 11 , 2024
Earthquake: அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நீருக்கடியில் ஏற்படும் தவறுக் கோடு, கலிபோர்னியாவின் ‘பிக் ஒன்’ ஐ விட பேரழிவை ஏற்படுத்தும் உலகம் முழுவதும் இதுவரை கண்டிராத மிக மோசமான நிலநடுக்கங்களை உருவாக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 7ம் தேதி அன்று அறிவியல் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், நீருக்கடியில் மேப்பிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் Cascadia Subduction Zone […]

You May Like