இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கின்ற நரேந்திரமோடி மைதானத்தில் நாளை ஆரம்பம் ஆகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த மைதானத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் உள்ளனர் முதலாளி ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது..
பொதுவாக உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும்போது தான் பிரதமர்கள் குடியரசு தலைவர்கள் என்று அரசியல் முக்கிய புள்ளிகள் அந்த விளையாட்டை காண்பதற்கு வருகை தருவார்கள்.
ஆனால் முதல் முறையாக நாளை நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ,ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பானீசும் நேரில் வருகை தர இருக்கிறார்கள்.. இதன் காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குஜராத் மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.