fbpx

தூள்‌…! தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்…! மத்திய அரசு தகவல்…!

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நீலகரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1061 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன

Vignesh

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை மேல்முறையீடு..!! இன்றே கடைசி நாள்..!! பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Oct 18 , 2023
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செப்.15, 2023ஆம் ஆண்டு முதல் தகுதிவாய்ந்த குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.1,000 உதவித் தொகை கோரி 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு, விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் கடந்த மாதம் (செப்.18) முதல் அவரவர் […]

You May Like