fbpx

வேலை இல்லா நபர்களா நீங்கள்… நாளை நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…!

சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான, 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வருகின்ற 17.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்டம். சின்னகவுண்டாபுரம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்து பயன்பெறலாம். இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் மற்றும் மகளிர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு 99420-73162, 98943-10758 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

Private employment camp to be held tomorrow

Vignesh

Next Post

"அரக்கர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்"!. பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர், நடிகைகள்!

Fri Aug 16 , 2024
"Monsters need to be hanged:" Genelia Deshmukh demands capital punishment for Kolkata doctor's rapist

You May Like