fbpx

கவனம்..‌! வரும் 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….! ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள முன்னனி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ தங்களின்‌ காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்‌ளனர்‌.

ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8ஆம்‌ வகுப்பு, 10 ஆம்‌ வகுப்பு, 12 ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Tue Mar 21 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like