fbpx

6 முதல் 12- ம் வகுப்பு வரை… மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை… மிஸ் பண்ணிடாதீங்க…! முழு விவரம்

ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.11.2024 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.11.2024 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை நடத்தப்பெறும்.

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப்பெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப் பெற உள்ளது.

பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: இந்தியாவின் விடிவெள்ளி – ஜவகர்லால் நேரு, குழந்தைகளை விரும்பிய குணசீலர், பஞ்சசீலக் கொள்கை, போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத் தொலைபேசி எண்- 04286 292164 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Prize money of Rs.5000 for students from 6th to 12th standard

Vignesh

Next Post

உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்கிறதா? கணவன் மனைவி சண்டை முதல் நிதிச்சிக்கல் வரை இத்தனை பிரச்சனை வருமாம்..!!

Fri Nov 1 , 2024
Let's know whether it is good or bad to keep spider webs at home.

You May Like