fbpx

புரோ கபடி!. 2வது பாதியிலே ஆட்டம் காலி!. தமிழ் தலைவாஸ் தொடர் ஏமாற்றம்!. பெங்கால் அணியை வீழ்த்தி பாட்னா அபாரம்!

Pro Kabaddi: புரோ கபடி தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி டெல்லி அணியும் பெங்கால் அணியை வீழ்த்தி பாட்னா அணியும் வெற்றிபெற்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (டிச.1) நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. முதல் பாதி 12-12 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினரை ‘ஆல்-அவுட்’ செய்த டில்லி அணி 20 புள்ளி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு 9 புள்ளி மட்டும் கிடைத்தது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 21-32 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (8) ஆறுதல் தந்தார். டில்லி அணி சார்பில் நவீன் குமார் 11, கேப்டன் அஷு மாலிக் 5 புள்ளி பெற்றனர். இதுவரை விளையாடிய 14 போட்டியில், 5 வெற்றி, ஒரு ‘டை’, 8 தோல்வி என 33 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. டில்லி அணி 43 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 ‘டை’, 5 தோல்வி) 8வது இடத்தில் உள்ளது. மற்றொரு லீக் போட்டியில் பாட்னா அணி 38-35 என்ற கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது.

Readmore: ஆசிய ஹாக்கி!. தொடக்கம் முதலே அதிரடி!. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!.

English Summary

Pro Kabaddi!. The game is empty in the 2nd half! Disappointment of Tamil Thalaivas series!. Patna is great after defeating the Bengal team!

Kokila

Next Post

இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? உங்க மாவட்டமும் இருக்கா..!

Mon Dec 2 , 2024
In which districts are schools and colleges closed today?

You May Like