fbpx

பாரிவேந்தரின் SRM நட்சத்திர ஹோட்டலுக்கு சிக்கல்..!! உடனே காலி பண்ணுங்க..!! குத்தகை காலம் முடிந்ததால் நடவடிக்கை..!!

திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் (SRM) நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.75 லட்சம் குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஹோட்டலுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஹோட்டலை காலி செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர்கள் சோனா பிரசாத், பார்த்தசாரதி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஹோட்டல் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் முறையாக குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுடன் குத்தகை ஒப்பந்தம் முடிந்த உடனே, ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது ஹோட்டலில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம், உடனடியாக ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More : கஞ்சா விற்கும் குற்றவாளியுடன் கூட்டு..!! தலைமைக் காவலர் சிக்கியது எப்படி..? மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Ensure passenger safety. At the same time, the hotel cannot be vacated immediately.

Chella

Next Post

'ரூ.108 பிளான்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்ஸ்' ஜியோ, ஏர்டெல்லுக்கு டஃப் கொடுத்த BSNL..!!

Fri Jun 14 , 2024
BSNL offers daily data and unlimited voice calls at a price that leading telecom companies like Jio, Airtel and Vodafone Idea can't offer.

You May Like