fbpx

கர்ப்பிணியை நிர்வாணமாக்கி ஊர்வலம்..!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

ராஜஸ்தான் மாநிலம் நிக்லகோட்டா என்ற கிராமத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் உட்பட 17 பேர் நிர்வாணமாக்கி சாலையில் நடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான வீடியோவும் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் புகாரளித்தார். கர்ப்பிணி பெண்ணின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 17 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இதே வழக்கில் தொடர்புடைய 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ”நாட்டில் பெண்கள் தெய்வங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டனர். பழங்காலத்தில் வேதங்களில் பெண்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

ஆனால், தற்போது பெண்கள் மீதான வன்முறையும், அட்டூழியங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதே போன்ற குற்றம் மணிப்பூரிலும் நடைபெற்றது. இத்தகைய குற்றங்கள் பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More : கடும் போட்டிகளுக்கு இடையே கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு..!! திமுக அறிவிப்பு..!!

English Summary

Currently, violence and atrocities against women continue to take place.

Chella

Next Post

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாரான ஈரான்..!! நெதன்யாகு போட்ட ப்ளான்.. பதட்டத்தில் உலக நாடுகள்!!

Mon Aug 5 , 2024
Iran Could Attack Israel Today, Netanyahu Eyes Preemptive Strike

You May Like