கோலிவுட் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
நடிகை வனிதாவின் திருமணம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி, அவரால் ஏற்பட்ட மோதலால் பிரபலமடைந்தவர் தான் தயாரிப்பாளர் ரவிந்தர்.
இவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தனது லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் இவர் ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க இருக்கிறார். இவர் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை மகாலட்சுமியை தான் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் நெட்டிசன்களால் படு வைரலாக்கப்பட்டது.
இருவருக்கும் திருமணமான புதிது என்பதால் இது தல தீபாவளி. ஆனால் அவருக்கு தல தீபாவளி கொண்டாட முடியாத அளவிற்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.