தொலைத்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் உபகரணங்களை பயன்படுத்த தடை.
மத்திய அரசு, தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் பிரிவு 6 முதல் 8 வரை, 48 மற்றும் 59 (பி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை 4-ம் தேதி வெளியிட்டது. அது 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாடு தொடர்பான சட்டத்தைத் திருத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் தொலைத்தொடர்பு சட்டம் 2023 நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இந்திய தந்திச் சட்டம் மற்றும் இந்திய வயர்லெஸ் தந்தி சட்டம் போன்ற சட்டக் கட்டமைப்பை ரத்து செய்யும் வகையில் இந்த தொலைத் தொடர்புச் சட்டம் 2023 அமைந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி) மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தச் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்புச் சட்டம்- 2023, டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இச்சட்டம் பெற்றது. இச்சட்டத்தின் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 ஆகியவை பிரிவுகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளன.
பிரிவுகளின் முக்கிய அம்சங்கள் ; அலைக்கற்றைகளை உகந்த முறையில் பயன்படுத்துதல், தொலைத்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் உபகரணங்களை பயன்படுத்த தடை, டிராய் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான வரைமுறைகள் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் இந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.