காதலர் வாரத்தின் ஐந்தாம் நாள் சத்தியம் அல்லது வாக்குறுதி தினமான ப்ராமிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வழிகளில் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்த வழிகள் உள்ளன. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் விசேஷமானதாக இருந்தாலும் ப்ராமிஸ் டே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ப்ராமிஸ் டே-விற்கு என தனி சிறப்பு உள்ளது. ப்ராமிஸ் டே-வின் முக்கியத்துவம் மற்றும் இதன் தொடக்கம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ப்ராமிஸ் டே உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 11 அன்று காதலன் தனது காதலிக்கோ அல்லது காதலி தனது காதலனுக்கோ வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருப்போம் என உறுதியளிப்பது ப்ராமிஸ் டே ஆக கடைபிடிக்கிப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 ஆம் தேதி ப்ராமிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் உறவை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ப்ராமிஸ் டே எப்படி தோன்றியது என இதுவரை தரவுகள் இல்லை. ஆனால் இது காதலர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு உறவில் சத்தியம் அல்லது வாக்குறுதி என்பது முக்கியமானது. இவை காதல் உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ப்ராமிஸ் டே முக்கியத்துவம்: ப்ராமிஸ் டே என்பது காதலர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் அர்ப்பணிப்பின் வடிவமாகும். இந்த நாளில் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இந்த நாளின் வரலாறு ஒரு மர்மமாக இருந்தாலும் ப்ராமிஸ் டே-வின் முக்கிய சாராம்சம் காதலர்களால் பகிரப்படும் அர்ப்பணிப்பில் உள்ளது.
இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் என்றென்றும் நாம் ஒன்றாக இருப்போம் என உறுதியளிக்கிறார்கள். மோதிரங்களை மாட்டிக்கொள்வதில் தொடங்கி கடிதங்களை எழுதுவது வரை ஒருவருக்கொருவர் இதயப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுகிறார்கள். இந்த நாளில் ஒருவருக்கொருவர் அர்ப்பணித்து, அன்பு மற்றும் நம்பிக்கையின் நீடித்த நினைவுகளை உருவாக்க சிறந்த வாய்ப்பாகும்.
ஏன் ப்ராமிஸ் டே கொண்டாடுகிறோம்? ப்ராமிஸ் டே காதலர்களிடையே அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது. இந்த நாளில் காதல் உறவில் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி அதை மேலும் பலப்படுத்த வேண்டும். காதல் உறவில் ஏற்ற தாழ்வுகள், கடினமான சூழல் வந்தாலும் அவை எல்லாவற்றையும் கடந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்த காதலர்களுக்கு நினைவூட்டுகிறது.