fbpx

நீதிமன்றத்தில் தமிழக வழக்காடு மொழி…! மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்…!

அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ)பிரிவு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 348-வது சட்டப்பிரிவின் 2-வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)-ல், உயர்நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் முறையே தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைப் பெறப்பட்ட நிலையில் அவை ஏற்கப்படவில்லை.தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்பட்ட மற்றொரு வேண்டுகோளின் அடிப்படையில் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அரசு வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பான பரிசீலனைக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முந்தைய முடிவுகளையே மீண்டும் வலியுறுத்தினார்.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மொழிகள் குழுவை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ் ஏ பாப்டே தலைமையில் இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. சட்டம் தொடர்பான அம்சங்களை மாநில மொழிகளில் மொழி பெயர்க்கும் நோக்கில் சொற்களஞ்சியத்தை இந்தக்குழு உருவாக்குகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வேகமெடுக்கும் கொரோனா..!! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..!! மாநில அரசு முக்கிய அறிவிப்பு..!!

Fri Mar 24 , 2023
இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். 138 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்தது. கொரோனா காரணமாக […]

You May Like