அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், அவரது சொத்து, ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று நடைபெற்று வருகிறது..
கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத 2.16 கோடி பணம், வங்கி லாக்கர் சாவிகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்திருந்தனர்.. இந்த சோதனையில் பல வங்கிகளின் லாக்கர் சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது..
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், கடந்த ஆண்டு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், ஆவணங்கள் பற்றி விசாரித்து அவற்றை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.. அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தங்கமணி வீட்டில் வருவாய், பொதுப்பணி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்..