புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து செல்வோரை கவனித்துள்ளனர்.
சில ஆண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வீட்டிற்குள் வந்து சென்றனர். இதனை தொடர்ந்து, அதிரடியாக போலீஸ் படை உள்ளே நுழைந்து சோதித்ததில், அங்கே சில பெண்களுடன் ஆண்கள் உல்லாசமாக இருப்பதை கையும் களவுமாக பிடித்தனர்.
விபச்சார தொழிலில் நான்கு அழகிகளை வைத்து பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இதில் ஈடுபட்ட பெண்களை போலீசார் மீட்டனர். காப்பகத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த தொழிலை செய்த புரோக்கர் அந்தோணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகைக்கு வீடு எடுத்து அவர் விபச்சாரம் நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதில், வேறு யாராவது தொடர்பு கொண்டு இருக்கிறார்களா என்பது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.