சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது.
இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், திருவேக்காடு கனகதுர்காவை சேர்ந்த சங்கீதா என்ற பாலியல் புரோக்கர் தான் இரண்டு பெண்களை வைத்து கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின், போலீசார் 2 இளம்பெண்களையும் மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த புரோக்கர் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.