fbpx

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்! 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

CSK vs GT- ஐபிஎல் இறுதிப்போட்டி! சென்னை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!

Mon May 29 , 2023
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி […]

You May Like