fbpx

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்…!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்.

விண்வெளியில் பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த 8 ஆண்டுகளாக தகவல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-58 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. எக்ஸ்போசாட்” செயற்கைக்கோளை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நிறமாலை, தூசு, கருந்துளை, வாயுக்களின் மேகக்கூட்டமான “நெபுலா” குறித்து ஆய்வு செய்ய உள்ளது. எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக எக்ஸ்பெக்ட், போலிக்ஸ் ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது!… இந்த மாவட்டத்தில் மட்டும் 158% அதிகம்!

Mon Jan 1 , 2024
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஒட்டுமொத்தமாக 4% கூடுதலாகவும், திருநெல்வேலியில் 158% கூடுதலாகவும் பெய்துள்ளது. தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இரண்டுகட்டமாக அதிக அளவில் மழையை […]

You May Like