fbpx

TN Govt Jobs : தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை.. சென்னையில் பணி..!!

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னையில் இயங்கும் ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் காலியாகவுள்ள 7 நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள் :

நூலகர் மற்றும் காப்பாளர் – 7

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 01.07.2204 தேதியின்படி 18 வயது முதல் 30வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு அரசு நிர்ணயித்துள்ள வயது தளர்வுகள் பொருந்தும்.

கல்வித்தகுதி : செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடங்கள் :
1. தியாகிகள் மணிமண்டம், கிண்டி, சென்னை.
2. பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், கிண்டி, சென்னை.
3. இரட்டைமலை சீனிவாசன் நினைவகம், கிண்டி, சென்னை.
4. மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம், கிண்டி, சென்னை.
5. கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் மணிமண்டபம், காயிதேமில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில், சென்னை.
6. பெருந்தலைவர் காமராஜர் நினைவகம், கிண்டி, சென்னை.
7. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், கிண்டி, சென்னை.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விவரங்கள் அறிந்துகொள்ளலாம். மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுஅன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம்,
சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு, கிண்டி, சென்னை – 600 022.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.11.2024 மாலை 5 மணிக்குள்

Read more ; ஆடை இல்லாமல் திருமணம் செய்து கொண்ட 29 ஜோடிகள்.. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அந்த ரிசார்ட் பற்றி தெரியுமா?

English Summary

Public Relations Department of Tamil Nadu Government has published an employment notification for filling the posts of Librarian and Custodian.

Next Post

போலீசாரிடம் சிக்காமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமின் கோரி மனு..!!

Mon Nov 11 , 2024
Actress Kasthuri has filed a petition in the Madurai branch of the High Court seeking anticipatory bail in the matter of defaming Telugu people.

You May Like