fbpx

‘NO எக்ஸாம்’ தமிழக பொதுப்பணித்துறையில் வேலை.. 760 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில், பட்டதாரி பயிற்சி பணியிடங்கள், டெக்னிஷியன் (டிப்ளமோ அப்ரெண்டீஸ்), என்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள்:

பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – 500

டெக்னிஷியன் (டிப்ளமோ அப்ரெண்டீஸ்) – 160

என்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்கள் – 100

கல்வி தகுதி : என்ஜினியரிங் பட்டதாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு அல்லது அதற்கு நிகரான டெக்னாலஜி படிப்பு முடித்து இருக்க வேண்டும். டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ அல்லது துறை சார்ந்த பிரிவில் டெக்னாலஜி படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

என்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி/பி.ஏ/பிபிஏ/ பிகாம்/பிசிஏ என கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சம்பளம் எவ்வளவு? பட்டதாரி பயிற்சி பணிக்கு தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.9,000 வழங்கப்படும். டெக்னிஷியன் (டிப்ளமோ) அப்ரெண்டீஸ் – ரூ.8,000. என்ஜினியரிங் இல்லாத பட்டதாரி பணியிடங்கள் – ரூ.9,000

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 21.1.2025 முதல் 24.01.2025 வரை நடைபெறும். ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்க 25.11.2024 முதல் அவகாசம் தொடங்குகிறது. 31.12.2024 கடைசி நாளாகும்.

Read more ; திருப்பதி லட்டு விவகாரம்.. அதிகாலை 2 மணிவரை ரெய்டு நடத்திய அதிகாரிகள் குழு..!! சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

English Summary

Public Works Department of Tamil Nadu Government has announced employment.

Next Post

பொங்கல் பண்டிகை விடுமுறை அன்று மத்திய அரசின் CA தேர்வுகள்...! அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு...!

Sun Nov 24 , 2024
Central Government CA exams to be held on Pongal holiday

You May Like