புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு 14 வயது பெண் 69 வயது பாப்பா மற்றும் 63 வயது பெரிய பாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் இந்த விஷயம் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்த 2019ல் நடைபெற்றுள்ளது. அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் இருவரையும் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில் நீதிபதி சத்யா இது குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார். அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு நபருக்கு ஆயில் தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். மேலும் மற்றொருவருக்கு சிறுமையை மிரட்டிய காரணத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.