மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா இவர் டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும், அங்கீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆலயங்களுக்கு சென்று வந்துள்ளனர். அந்த விதத்தில் புனே புறநகர் பகுதியில் இருக்கும் பிரதி ஷீர்டி ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தங்களுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருப்பதாகவும் அங்கு சென்று விட்டு வீடு திரும்பலாம் என்று மனைவி தெரிவித்ததால் சுராஜ் மனைவியின் ஆசைப்படி அங்கு செல்ல ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
அடுத்த சில மணி நேரத்தில் அங்கீதாவின் தந்தைக்கு தன்னுடைய மகளிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது தோட்டத்தில் இருந்த தங்களை முகமூடி கொள்ளையர்கள் சிலர் தாக்கியதாகவும் அதில் சுராஜ் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து கதறி அழுதுள்ளார். மகள் அங்கிதா இதனை கேட்டு அதிர்ந்து போன அங்கிதாவின் தந்தை உடனடியாக தோட்டத்து வீட்டிற்கு சென்றார் இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு மறைந்த காவல்துறையினர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு நடுவில் சந்தேகத்தின் அடிப்படையில், அங்கீதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத அங்கிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தங்களுடைய பாணியில் விசாரணை நடத்தினர் பின்னர் கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். திருமணமான சில நாட்களிலேயே கணவரை தனக்கு பிடிக்காமல் போனதாகவும் தன்னை சந்தேகப்பட்ட கணவனை கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்த காவல்துறையினர் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற விதத்தில் விசாரித்து வருகிறார்கள்.