fbpx

ஜாலி…! நாளை முதல் காலாண்டு விடுமுறை… 7-ம் தேதி வரை… பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கான தேர்வு செப்.19 முதல் தொடங்கியது. இந்த வகுப்புகளுக்கான தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்டோபர் 7-ம் தேதி அன்று திறக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காலாண்டு விடுமுறை நேரத்தில் சிறப்பாக வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில்; 2024-2025 ஆம் கல்வியாண்டு , அனைத்து பள்ளிகளுக்கும் 28.00.2024 முதல் 06.10.2024 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது . 07.10.2024 அன்று பள்ளித் திறப்பதற்கு முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி வசாகத்தினை துய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் , பள்ளித் திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாட்களை வழங்க தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Quarterly holiday from tomorrow… to 7th… Action order flown to schools

Vignesh

Next Post

சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்கள்...! 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை...!

Fri Sep 27 , 2024
Illegal people abroad...! Action testing in more than 10 locations

You May Like