fbpx

அக்டோபர் 8ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை…! முழு விவரம்…

தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, 5 நாட்கள் காலாண்டு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை நாட்களை அதிகரித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 3ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

மின் கட்டண உயர்வு அறிவிப்பு... அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு...!

Tue Sep 26 , 2023
பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் த.மோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள பீக் அவர்ஸ் பயன்பாட்டு மின் கட்டணத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதனை திரும்பப் பெற வேண்டும் என சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்திருந்தனர். […]

You May Like