வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த டீ- சர்ட்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வயநாட்டில் வரும் நவ. 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தனது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வயநாட்டில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஒன்றாகக் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த ஐ லவ் வயநாடு டீ சர்ட் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நான் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய போதே அது ஆச்சரியமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த யாத்திரையின் நோக்கம் அரசியல்.. ஆனால் யாத்திரை தொடங்கிய போதே மக்கள் என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டனர். மக்கள் என் மீது அன்பு செலுத்துவதாகக் குறிப்பிட்டனர். அப்போது தான் அரசியலில் அன்பு என்ற வார்த்தை இல்லாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டதை உணர்ந்தேன்.
வயநாட்டுக்கு வந்த பிறகே நான் அரசியலில் அன்பு குறித்துப் பேச ஆரம்பித்தேன். வயநாட்டு மக்கள் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதை உணர்ந்தேன்… அரசியலில் அன்புக்கு மிக முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் தான் இந்த டீசர்ட்டை அணிந்து வந்துள்ளேன்” என்று கூறி டக்கென திரும்பித் தான் அணிந்திருந்த டீ-சர்ட்டை மக்களிடையே காட்டி பேசினார்.
Read more ; அவதார் 3 ஆம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!! எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜேம்ஸ் கேமரூன்..