இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம் என்றூ, மோடி ஒரு ராஜாவும் ராகுல்காந்தி விமர்சித்ததற்கு, பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.. 57 எம்.பி.க்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், அவர்கள் சிறிது காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி
“சர்வாதிகாரத்தைப் பாருங்கள், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி விவாதிக்க முடியாது. காவல்துறை மற்றும் மற்றும் புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எங்களை கைது செய்தாலும், உங்களால் ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது. ‘உண்மை’ மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி “இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம், மோடி ஒரு ராஜா” என்று கூறினார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதிலடி கொடுத்தார், மேலும் காங்கிரஸ் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு எந்த மரியாதையும் காட்டவில்லை என்று கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி கிழித்த நிகழ்வை மேற்கோள் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா ஒரு போலீஸ் நாடாக மாறிவிட்டது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, “இது காங்கிரஸ் கட்சியின் கற்பனை என்று தெரிவித்தார்.
மேலும் “அரசியலமைப்பு விழுமியங்களை மீறி எமர்ஜென்சியை விதித்தவர்கள், அவர்கள் இந்த குற்றச்சாட்டை வைப்பது பொருந்தாது. அவர்கள் ஒருபோதும் அரசியலமைப்புக்கு மரியாதை காட்டவில்லை.,” என்று தெரிவித்தார்..
முன்னதாக நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் 6 நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாவது சுற்று விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜராகுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.
சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் ஐந்து நாட்களில் 50 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அமர்வுகளில் கேள்வி கேட்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..