தேர்தல் ஆதாயங்களுக்காக மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரை, ராகுல்காந்தி விமர்சிப்பதாக வீர் சாவர்க்கரின் பேரன் கடுமையாக சாடியுள்ளார்.
சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, கர்நாடகா தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெறவே, ராகுல் காந்தி சாவர்காரை பற்றி விமர்சிக்கிறார் என்று தெரிவித்தார்.. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை தேர்தல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வீர் சாவர்க்கரின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத காரணத்தினால் ராகுல்காந்தி அவரை பற்றி தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருவதாக ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார்…
இதனிடையே சாவர்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதாக அவதூறு புகார் அளிக்கப்பட்டது. சாவர்க்கரின் மற்றொரு பேரன் சாத்யகி சாவர்க்கர், ராகுல்காந்தி மீது கிரிமினல் அவதூறு புகார் அளித்தார்.
இந்து சித்தாந்தவாதி சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து கவிமர்சித்து வருகிறார்.. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி வருகிறார்.. அந்த வகையில் மோடி சமூகத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை கிடைத்தது.. இதையடுத்து அவர், மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர், தனது பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றும்ம், காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள் ” என்று கூறியிருந்தார்.. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.