fbpx

9 மாவட்டங்களில் ரெய்டு… போலிவங்கிகளில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல்.. அதிரடி!!

போலி வங்கிகள் நடத்தி வந்த இடங்களில்சோதனை செய்து ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

சென்னை உள்பட 9 மாவட்டங்களில்   போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.   நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என முழு செட்டப் உடன் இந்த போலி வங்கிகள் செயல்பட்டதாகவும்,  சுமார் 2000 பேர் இந்த வங்கியில்  வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர்ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’போலியான வங்கிகளை நடத்தி வரும் கும்பல் பற்றிதகவல் கிடைத்தத. சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி அவர்களை பிடித்துள்ளோம். மதுரை, விருதாச்சலம் உள்பட 9 இடங்களில் வங்கிகளைப் போலவே செயல்பட்டு வந்த போலி வங்கிகளின் உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். சொசைட்டி பெயரில் கிரெடிட் கார்டு கொடுத்த சம்பவம் கூட நடந்துள்ளது. இது பற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று செயல்படும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சந்திரபோஸ் உள்ளிட்ட மோசடி கும்பலை சேர்ந்த 46 பேரை  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும்  காவல் ஆணையர் விளக்கமளித்தார். கடந்த ஓராண்டாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் இந்த  போலி  வங்கி நடத்தி வந்துள்ளதாகவும்,  போலி வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டவர்கள் எத்தனை பேர் என  விசாரணை நடத்தி வருவதாகவும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

Next Post

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது!!

Tue Nov 8 , 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பார்க்கலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5,520 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினார்கள். மகளிருக்கான 30 சதவீத […]

You May Like