fbpx

தமிழகத்தில் எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 27 மற்றும் 28 உள்ளிட்ட தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்பதை ஒட்டியே இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல 27 மற்றும் 28 உள்ளிட்ட தேதிகளில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம். மேலே குறிப்பிடப்பட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது.

Next Post

கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை தோசை..!! எப்படி செய்வது..? விவரம் உள்ளே..!!

Wed May 24 , 2023
நம்மில் பலருக்கும் கொண்டை கடலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும். ஏனென்றால், எடையை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் நம்மில் பலர் ஊறவைத்த அல்லது முளைக்கட்டிய சுண்டலை காலையில் சாப்பிட்டு வருவோம். கொண்டைக் கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. வாத நோய், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் […]
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை தோசை..!! எப்படி செய்வது..? விவரம் உள்ளே..!!

You May Like