fbpx

தமிழகமே…! இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…! வானிலை மையம் கொடுத்த அப்டேட்…!

சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, நெல்லை, சிவகங்கை, பெரம்பலூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, நெல்லை, சிவகங்கை, பெரம்பலூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.12.2023 முதல் 31.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.! பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.! புதிய கட்டுப்பாடுகள் அமல்.!

Tue Dec 26 , 2023
தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் கூட்டமிருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்ததோடு மூச்சுத் திணறலால் சிலர் இறந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன . இந்நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் குருபூஜை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பல புதிய […]

You May Like