fbpx

#Rain: தமிழகத்தில் இன்று மொத்தம் 10 மாவட்டத்தில் பயங்கர மழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தருமபுரி,நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும்‌ 1 மற்றும்‌ 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும்‌ 3-ம்‌ தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்‌. மேலும்‌, அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழ்நாட்டில் 4,000 பேராசிரியர்கள் நியமனம்..!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed May 31 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே சமயம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனைப் போலவே வழக்கமாக இருக்கும் மாணவர் சேர்க்கையை விட இந்த வருடம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு […]

You May Like