fbpx

இந்த 3 மாவட்டத்தில் உள்ள மக்கள் உஷாரா இருங்க…! இன்று கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பகுதிகளில் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வரும் 6-ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும்...! தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்...! ஆசிரியர்கள் அதிரடி முடிவு...

Wed Oct 4 , 2023
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியது. இது குறித்து தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.சேசுராஜா கூறியதாவது; பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுடன் இதுவரை 6 சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் பள்ளிக் […]

You May Like