fbpx

மக்களே…! இன்று இந்த 6 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை…!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இனி காலை 6:30 முதல் 11:30 வரை மட்டுமே...! பள்ளிகளின் நேரத்தில் மாற்றம்...! ஆட்சியர் உத்தரவு...!

Tue May 2 , 2023
இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது […]

You May Like