fbpx

வங்கக்கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ நாளை புயல் உருவாகும்…!

வங்கக்கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ நாளை புயல் உருவாகும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, ”வட தமிழக கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்குச்‌ சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வுப்‌பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ புயலாக மேலும்‌ வலுபெறக்கூடும்‌.

இது வடக்கு-வடமேற்குத்‌ திசையில்‌ நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ 11-ம்‌தேதி வாக்கில்‌ நிலவக்கூடும்‌. அதன்‌பிறகு வடக்கு-வட கிழக்குத்‌ திசையில்‌ திரும்பி, வங்கதேசம்‌ – மியன்மார்‌ கடற்கரை நோக்கி நகரக்கூடும்‌ என‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அதிரடி...! டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த தடை...! மத்திய அரசுக்கு பரிந்துரை...!

Tue May 9 , 2023
2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் மாசுபட்ட நகரங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் […]

You May Like