fbpx

கவனம்…! அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் இருக்கும்…! வானிலை மையம் தகவல்…!

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிரபல டொயோட்டா நிறுவனர் மகன் ஷோய்சிரோ காலமானார்...!

Thu Feb 16 , 2023
டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார். டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார். அவருக்கு வயது 97. டொயோடா இதய செயலிழப்பால் காலமானார் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஷோய்ச்சிரோ 1937 இல் நிறுவனத்தை நிறுவிய கிச்சிரோ டொயோடாவின் மூத்த மகன் ஆவார். அவருக்குப் பிறகு தற்போது தலைவரும் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான அகியோ டொயோடா பதவியேற்றார்.. டொயோட்டாவை உலகளாவிய வளர்ச்சியை […]

You May Like