fbpx

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது..இந்த திடீர் மழை இந்த பகுதிகளில் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

வரும் 22-ம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.. சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Sat Mar 18 , 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் தேர்வர்கள் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் […]

You May Like