fbpx

ராஜீவ் காந்தி கொலை வழக்கு..! விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்..!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கும் மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் செய்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு..! விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்..!

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை தொடர்பாக விசாரணை நடந்து முடியும் வரை இடைக்காலமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நளினியும் மனு தாக்கல் செய்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது

Chella

Next Post

மனைவியை சந்தேகப்பட்டு துப்பாக்கியால் சுட்ட கணவன்; துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!

Thu Aug 11 , 2022
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகாவை சேர்ந்த செட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(43).   இவரது மனைவி செஸ்மா(34). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.  அவர் பெங்களூரில் உள்ள சித்தி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி செஸ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார் கோபால். எனவே அடிக்கடி மனைவியிடம் அது பற்றி கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். நேற்று […]

You May Like