fbpx

BJP: ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி…! அண்ணாமலை சொன்ன பதில்…!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவைத் தேர்தலில் பாஜக – பாமக இணைநது செயல்படும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலை கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ADMK: 200 பேருக்கு பிரியாணி...! தேர்தல் நடத்தை விதி மீறிய அதிமுக முன்னாள் அமைச்சர்...! அதிரடி காட்டிய காவல்துறை...!

Tue Mar 19 , 2024
நெற்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி அதிமுக கொடியேற்றி 200 பேருக்கு பிரியாணி வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகரில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கொடி ஏற்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிகழ்ச்சியை உடனடியாக […]

You May Like