fbpx

2022 மின்சார சட்டத் திருத்த விதிகளை கொண்டு வரும் மத்திய அரசு…! வலுக்கும் எதிர்ப்பு குரல்…!

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில்  ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலிக்க புதிய விதிகள் வகை செய்கின்றன.

தனியார் மின்நிறுவனங்களுக்கு சாதகமான இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சூழலில் கொள்முதல் விலைக்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுமானால், மின்சார கொள்முதலில் நடக்கும் ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தேவையற்ற குழப்பங்களையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இன்றைய சூழலில் மக்களால் இதை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்..!! அரசு தங்கும் விடுதி பற்றி தெரியுமா.? மாதம் ரூ.200 மட்டுமே..!!

Fri Jan 20 , 2023
பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் திட்டத்தை கடந்த 1975ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாத வருமானம் சென்னையில் ரூ.25,000-க்குள்ளும், […]
வேலை செல்லும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்..!! அரசு தங்கும் விடுதி பற்றி தெரியுமா.? மாதம் ரூ.200 மட்டுமே..!!

You May Like