நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் கனடாவில் உள்ளார். நேற்று தன் குழந்தைகளுடன் வெளியே காரில் புறப்பட்டு சென்றபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் அவர் மீட்கப்பட்டுஅருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்பா உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவரது குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு சமூக வலைத்தலத்தில் நடிகை ரம்பா பதிவிட்டுள்ளார்.
90ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. ரம்பா என்றாலே நினைவுக்கு வருவது பார்த்திபன் கூறும் வசனம்தான் சார்.. ரம்பா சார்… என்ற வசனம் அனைவருக்குமே நினைவுக்கு வரும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் ரம்பா. சினிமாவிற்கு பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார். இந்நிலையில் இலங்கை தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் குடும்பத்தினருடன் கனடாவில் குடியேறிய அவருக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு காரில் அழைத்து வந்தபோது ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதியது இதில் அவரது குழந்தைகள் மற்றும் ரம்பா காயம் அடைந்தனர்.
ரம்பாவுக்கு லேசான காயம்தான் எனவும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இளைய குழந்தை சாஷா படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்புதான் குழந்தை பாடல் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ரம்பா இதையடுத்து 24 மணி நேரத்திலேயே குழந்தை விபத்தில் சிக்கியது. யார் கண்பட்டதோ குழந்தை விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.