இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பால், 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் போன் செய்யப்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது. ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பால், 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.