fbpx

இந்தியாவை அச்சுறுத்தும் RANSOMWARE இணைய தாக்குதல்கள்.!! ஷாக்கிங் ரிப்போர்ட்.!!

RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சைபர் கிரிமினர்களால் அதிக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இவர்கள் புதிய அச்சுறுத்தலை உருவாக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய இணைய(CYBER) தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த ransomware மற்றும் மால்வேர் ஆகியவை 2024 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த இணைய அச்சுறுத்தலாக வெளிப்பட்டுள்ளன, 42 சதவீத IT மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் அவற்றை வேகமாக வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான தேல்ஸின் கூற்றுப்படி, SaaS பயன்பாடுகள் கிளவுட் அடிப்படையிலான சேமிப்பு கிளவுட் உட்கட்டமைப்பு மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் ஆகியவை இந்த தாக்குதல்களின் முதன்மை இலக்காக இருக்கிறது என தேல்ஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள தேல்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நாட்டு இயக்குநருமான ஆஷிஷ் சரஃப் கூறுகையில், “இந்தியாவிலும் உலகெங்கிலும் டேட்டா பிரைவசி விதிமுறைகள் தொடர்ந்து மாறி வருவதால் நிறுவனங்கள் இணக்கமாக இருப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தக்கவைக்க தங்கள் நிறுவனத்தில் நல்ல தெரிவுநிலையைக் கொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

18 நாடுகளில் உள்ள 37 நிறுவனங்களைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் பதிலளித்தவர்களில் 11 சதவீதம் பேர் இந்தியாவில் RANSOMWARE தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்தனர். அதில் 10 சதவீதம் பேர் தங்கள் தகவல்களை மீட்பதற்காக பணமும் செலுத்தி இருக்கின்றனர்.

Read More: பாஜகவின், தேர்தல் தோல்வி பயத்தால் டெல்லி முதல்வர் கைது..! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

Next Post

Candidate: வேகமாக பரவிய வீடியோ...! திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம்...!

Fri Mar 22 , 2024
நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிப்பு. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. எனவே தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக கூட்டணி மற்றும் தேர்தல் பணிகளை இறுதிசெய்துள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை […]

You May Like