fbpx

நடுரோட்டில் பலாத்காரம்.. கதறி அழுத பெண்.. கண்டுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்..!! பகீர் சம்பவம் நடந்தது எங்கே?

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்கமால் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய லோகேஷ் என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் லோகேஷை கைது செய்தனர்.

லோகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மது அருந்தச் செய்ததாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் பிளாட்ஃபார்மில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்காமல், பலரும் வீடியோ எடுத்ததுதான் மிகக் கொடூரம். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். மத்திய பிரதேச முதல்வரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் அறங்கேறியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், மத்திய பிரதேச முதல்வர் இந்த் சம்பவம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Read more ; ரொம்ப நாளா எதிர்பார்த்த அப்டேட்.. வந்தாச்சு!! இனி ஒரே UPI அக்கவுண்டை 5 பேர் பயன்படுத்தலாம்..

English Summary

Rape On Road In MP’s Ujjain: Another Day, Another Woman As Nation Boils Over Kolkata Case

Next Post

மதுரையில் வேலை.. ரூ.35,000 வரை மாதச் சம்பளம்..!! No எக்ஸாம்.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Fri Sep 6 , 2024
In Madurai district, notification has been released for the vacant post of District Resource Instructor

You May Like