fbpx

எச்சரிக்கை.. வேகமாக அதிகரிக்கும் H3N2 பாதிப்பு.. மாநிலங்கள் இதை எல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. மத்திய அரசு அட்வைஸ்…

H3N2 பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது..

H3N2 பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ” கடந்த சில மாதங்களில் கொரோனா பாதிப்பு, கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவது, உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.. எனவே இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்…

கடுமையான சுவாச நோய்த்தொற்று அல்லது காய்ச்சல் போன்ற நோய் போன்றவற்றில் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.. மேலும் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகியவற்றில் கவனம் வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்…

இதனிடையே H3N2 வைரஸை தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.. சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை கழுவுதல், முக்கவசம் அணிவது, நெரிசலான இடங்களை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்..

Maha

Next Post

நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு...! இது அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்...! ஆட்சியர் உத்தரவு...!

Sun Mar 12 , 2023
தருமபுரி மாவட்டத்தில்‌ 12-ஆம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ சார்பில்‌, சென்னை அரசுத்‌ தேர்வுகள்‌ துறையால்‌ நடப்புக்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ வருகின்ற 13.03.2023 திங்கட்கிழமை தொடங்கி 03.04.2023 திங்கட்கிழமை வரை தமிழகம்‌ முழுவதும்‌ நடத்தப்படுகின்றது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலும்‌ 12-ம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள்‌ தொடங்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள்‌, 4 அரசு […]

You May Like