தெலுங்கு பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக வெளியாகியுள்ள போட்டோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய்தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு டேட்டிங் சென்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. இருவரும் மணப்பெண், மணமகன் கோலத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
இந்த போட்டோ எடிட் செய்ய போட்டோ என்பது தெரிகின்றது. இருப்பினும் இந்த ஜோடிகள் இணைய வேண்டும் என கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கண் ஜோகரின் டாக்ஷோ ஒன்றில் அவரது காதல் வாழ்க்கை பற்றி கேட்டபோது ரஷ்மிகாவுடனான காதல் வதந்தி என்று தெரிவித்தார். மேலும் அவர் , ’’ரஷ்மிகாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நான் இரண்டு படங்கள் நடித்துள்ளேன். எனவே அவர் உண்மையிலேயே நல்ல தோழி. படத்தில் நிறைய உயர்வு தாழ்வு பார்த்துள்ளீர்கள் எனவே உங்களுக்கு அது போல ஒரு பிணைப்பு உருவாகி உள்ளது. ’’ என தெரிவித்திரந்தார்.
இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செய்தித்தாளில் இ ருவரும் பிரிந்ததாக செய்திகள் வந்தது. லைகர் படம் அந்த அளவுக்கு வசூலை அளிக்காததால் பின்னர் இருவரும் இணைந்ததாக கூறப்படுகின்றது.