fbpx

ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த நாளில் ரேஷன் கடைக்கு போகாதீங்க..!! எந்த பொருளும் கிடைக்காது..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2.25 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுகளுக்கு (PHH) சர்க்கரை உள்பட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படுகிறது. முன்னுரிமை கார்டுகளான அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது.

இதேபோல் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கு (NPHH) அரிசி உள்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. சர்க்கரை விருப்ப கார்டுகளுக்கு (NPHH-S) அரிசி தவிர மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருளில்லா அட்டைகளுக்கு (NPHH-NC) எந்த பொருளும் வழங்கப்படுவது இல்லை. இதற்கிடையே, ரேஷன் கடைகளில் தற்போது துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் முறையாக இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. அரிசி, சர்க்கரை போன்றவை தான் சரியாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு கேட்டால் மாதக்கடைசியில் வருமாறு ஊழியர்கள் கூறுகிறார்களாம்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் நாளையும் நாளை மறுநாளும் பொருட்கள் வாங்க முடியாது. ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Read More : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மீண்டும் பிடிஆர் கைக்கு போகும் நிதித்துறை..? தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..!!

English Summary

The government has announced a holiday for all ration shops in Tamil Nadu on Saturday (July 20).

Chella

Next Post

குழந்தைகளின் தரவுகளில் பெற்றோரின் ஒப்புதல் முறையை இயங்குதளங்கள் தீர்மானிக்கலாம்!. MeitY!.

Fri Jul 19 , 2024
Platforms can determine parental consent on children's data!. MeitY!.

You May Like