fbpx

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களே… இன்று காலை 10 மணி முதல்…! யாரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Vignesh

Next Post

பாஸ்போர்ட் விசாரணைக்கு சென்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சப் இன்ஸ்பெக்டர்.! அதிரவைக்கும் வீடியோ காட்சி.!

Sat Dec 9 , 2023
பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி […]

You May Like